மேலும்

நாள்: 4th October 2015

மைத்திரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய மகிந்தவின் தொலைபேசி அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படை உயர்அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் ரணில் நடத்திய கூட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அலரி மாளிகையில், சிறிலங்காவின் முப்படைகளினதும், காவல்துறையினதும் உயர்மட்ட அதிகாரிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் குறித்து மேலும் 3 மேஜர் ஜெனரல்களிடம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் மூன்று மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம்.