மேலும்

நாள்: 8th October 2015

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

ஐ.நா வின் சர்ச்சைக்குரிய ‘சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி’ – முதலமைச்சர் விளக்கம்

ஐ.நாவின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி தொடர்பாக, வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி்விக்னேஸ்வரன் இன்று அவையில் அளித்த விரிவான பதில்.

இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆன்ம பரிசோதனை – ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு தூதுவரை அனுப்புகிறது ஜப்பான்

சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்தில் பங்களிப்புச் செய்வதற்காக, மோட்டூ நுகுசி என்ற தூதுவரை, கொழும்புக்கு அனுப்ப ஜப்பான் தீர்மானித்துள்ளது.

ரவிராஜ், எக்னெலிகொட படுகொலைகளை மேற்கொண்டது சிறிலங்கா புலனாய்வு பிரிவே- விசாரணையில் உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலைகள், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட இருவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் முக்கிய பிரமுகர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகிய இருவரையும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காலிக்கு அப்பாலுள்ள கடலில் சிறிலங்கா கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்

காலிக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில், சிறிலங்கா கொடியுடன் ஆயுதக் கப்பல் ஒன்று சிறிலங்கா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.