மேலும்

நாள்: 25th October 2015

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேஜஸ் போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்க இந்தியா விருப்பம்

சிறிலங்கா விமானப்படைக்கு, உள்நாட்டில் தயாரித்த தேஜஸ் ரக சுப்பர் சொனிக் ஜெட் போர் விமானங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருக்கிறாரா சிறிசேன?

சிறிலங்கா இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும்.

திகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு

திகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டப்பட்ட அதிகாரி மன்னாருக்கு மாற்றம்

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்குப் பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, சிறிலங்கா காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சேற்றில் சிக்கினார் சிறிலங்கா அதிபர் மைத்திரி

சிறிலங்காவின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சேற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.

மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம்.

போர்க்குற்றங்களை விசாரிக்க தனி மேல் நீதிமன்றம் – சட்டங்களை வரையும் பணி ஆரம்பம்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மேல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.