மேலும்

நாள்: 19th October 2015

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பிளவு?

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துக்குள் பிளவுகள் ஏற்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் படைத்தளபதிகளிடம் விசாரணை – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய சிறிலங்காவின் படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த அதிபர் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் வழக்கில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் விசாரணைக்கு அழைப்பு

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்திருந்த வழக்கில், பிரதிவாதிகளாக சிறிலங்கா இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தளபதியை சேர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி எடுத்த முடிவே அவரைப் பலியெடுத்தது – உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் மீதும் பயங்கரவாத தடைச்சட்டம் – 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வருவதற்கு பச்சைக்கொடி காட்டுகிறார் ரணில்

சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பரந்தனில் தமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி – நாளை இறுதிச்சடங்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கான உலகத் தமிழர்கள் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுமாறு, வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.