மேலும்

பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறது செஞ்சிலுவை சங்கம்

SLRC-emblemஇந்தியாவின் வீடமைப்பு திட்ட உதவி நிதியைப் பெறுவதற்கு, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியதாக, முழங்காவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று சிறிலங்கா செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக இரண்டு கட்டங்களாக தாம் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், இது தொடர்பாக, குற்றச்சாட்டை சுமத்திய பெண், மற்றும் 9 செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளில், இந்திய தூதரக அதிகாரிகளும் ஈடுபட்டதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

எனினும், இந்த விசாரணைகளில் குறிப்பிட்ட பெண் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனினும், மேலதிக நடவடிக்கைக்காக இந்த விசாரணை அறிக்கை மற்றும் அதுபற்றிய ஆவணங்கள் அனைத்தும், சட்டம் ,ஒழுங்கு அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கருத்து “பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறது செஞ்சிலுவை சங்கம்”

  1. மனோ says:

    ஆதாரம் எப்படிக் காட்ட முடியும்? உடுத்த சேலையும் படுத்த பாயுமா தேவை?

    இந்தக் குற்றத்துக்கே ஆதாரம் கிடைக்காத போது போர்க் குற்ற விசாரணைக்கு எந்த ஆதாரத்தை காட்டுவது? முதலில் செஞ்சிலுவைச் சங்கத்தை சலவை செய்ய வேண்டும்

    தமிழன் தலையில் எல்லாருமே மிளகாய் அரைக்கிற காலம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *