மேலும்

நாள்: 17th October 2015

ஐ.நாவுக்கான தூதரகத்துக்கு இராணுவ ஆலோசகரை சிறிலங்கா நியமித்தது ஏன்?

ஐ.நாவில் சிறிலங்காவின் அமைதிகாப்பு முயற்சிகளை ஒருக்கிணைக்கவே, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில், புதிதாக இராணுவ ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார முதலீடுகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் ரணில் பேச்சு

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டின் பிரதமர் லீ சென் லூங் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

தம்மை பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், சிறிலங்கா அதிபரின் உறுதிமொழியை அடுத்து இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் வாக்குறுதியை அரசியல் கைதிகள் நிராகரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் தீர்வு காண்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை ஏற்க, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு- மைத்திரி வாக்குறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக  அடுத்தமாதம் 7ஆம் நாளுக்கு முன்னதாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

33 அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி – மேலும் பலரின் நிலை மோசம்

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 12 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைதிகளின் எண்ணிககை 33 ஆக அதிகரித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று பரவலான போராட்டங்கள்

தமது விடுதலையை வலியுறுத்தி, சிறிலங்காவில் உள்ள 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் 217 அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், நேற்று பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.