மேலும்

நாள்: 11th October 2015

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு நியூசிலாந்தும் இணை அனுசரணை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக நியூசிலாந்தும் அறிவித்துள்ளது.

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்புக்கு தப்பிய கருணா- – 11 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மை

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா.

வன்னியில் வீடமைப்புத் திட்டத்துக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – இந்தியா விசாரணை

கிளிநொச்சிப் பகுதியில் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளிடம், பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தூதரகமும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும், இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படும் – சிறிலங்காவின் நீதியமைச்சர் தகவல்

காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு கலைக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கலப்பு விசாரணையே நடக்கும் – சுமந்திரன் செவ்வி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்படி “ஹைபிரிட்” என்ற கலப்பு நீதிமன்ற விசாரணையே இடம்பெறும்.

காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள்

போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமற்போனோர் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக தற்போது பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவிடம் வாக்குறுதி பெற்றது சீனா

இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான உத்தரவாதத்தை, சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சீனா பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு

சிறிலங்கா அரசாங்கம் அடுத்த ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கான நிதி ஒதுக்கீட்டை, 306 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து படையினரைக் காப்பாற்ற சிறிலங்கா அரசு நடவடிக்கை

போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறிலங்காப் படையினர் சார்பில் வாதிடுவதற்கான சட்டவாளரை நியமித்து, அவர்களுக்கான சட்ட செலவுகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கமே, ஏற்றுக் கொள்ளவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.