மேலும்

நாள்: 24th October 2015

வெள்ளைக்கொடி விவகாரம், பாலச்சந்திரன் படுகொலைக்கு உயர்மட்ட உத்தரவே காரணம் – மங்கள சமரவீர

உள்ளக விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லையாம் – கூறுகிறார் பரணகம

தமது ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில்  எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை  என்று, காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்  ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

தமிழீழம், புலிகள் தோன்றக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையே – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

புதிய அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு

2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைச் சமர்ப்பித்தார்.

‘ரோ’வின் குகையாகி விட்டது யாழ்ப்பாணம் – அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரோ’வின் முகவர்கள் நிறைந்திருப்பதாகவும், வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.

விவாதத்தில் இருந்து நழுவினார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில், உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார்.