மேலும்

நாள்: 12th October 2015

போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதே சிறிலங்கா அரசின் பிரதான இலக்காம்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து ஆராய தென்னாபிரிக்கா செல்கிறது சிறிலங்கா உயர்மட்டக் குழு

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய சிறிலங்கா அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.

ஜெனிவா தீர்மானம் முழுமையான நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் செவ்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் நலனைக் கருத்திற் கொண்டு வரையப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் மட்டக்களப்பில் சிக்காதது ஏன்? – முன்கூட்டியே தகவல் கிடைத்து தப்பினார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தாம் கைது செய்யப்படவுள்ளதை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல்கைதிகள் எவரும் சிறையில் இல்லை – கைவிரிக்கிறார் சிறிலங்காவின் நீதி அமைச்சர்

சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்கைதிகளை ஒருவாரத்துக்குள் விடுவிக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து, உடனடியாக விடுதலை செய்யுமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் இன்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்

சிறிலங்காவின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வீடமைப்பு உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – கடும் கோபத்தில் புதுடெல்லி

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவியைப் பெறுவதற்கு, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள், புதுடெல்லிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு கடும் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.