மேலும்

நாள்: 21st October 2015

சமத்துவமான உறவை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது சீனா

சமத்துவமான நடத்தப்படுவதன் மூலமே, சிறிலங்காவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

ஒஸ்லோவின் பிரதி நகர முதல்வராகிறார் ஈழத் தமிழ்ப்பெண்

நோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி, பிரதி நகரமுதல்வராகத் தெரிவு செய்யப்படுவார்.

நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சீனாவின் தயவை நாடுகிறது சிறிலங்கா

ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக வட்டியுடன் கூடிய கடன்களால், சிறிலங்கா முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது மிக மோசமான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.

இன்று சிறிலங்கா வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், 25ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி கொழும்பு வருகை

போர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி வந்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரின் கடைசி 12 மணித்தியாலங்களில் புலிகளாலேயே அதிக பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்

போரின் கடைசி 12மணி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களுக்கு, விடுதலைப் புலிகளே காரணம் என்று, மக்ஸ்வெல் பரணகம  ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் – பரணகம ஆணைக்குழு

சிறிலங்காவில் போரின் போது, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ள  மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு, எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையே – பரணகம ஆணைக்குழு அறிக்கை

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையானதே என்று கூறியுள்ள, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை, இதுதொடர்பாக மூத்த இராணுவத் தளபதிகள் குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.