மேலும்

நாள்: 13th October 2015

பிள்ளையானை நாளை வரை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா காவல்துறை முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.

மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இருந்து வெளியேறுகிறது இந்திய நிறுவனம்

மன்னார் கடற்படுகையில், எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்ற சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர்.  திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம்

கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணையை தட்டிக்கழித்து, உண்மை, நல்லிணக்கம் மீது கவனம் செலுத்தும் சிறிலங்கா

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொரு படிமுறையிலும் அவர்களுக்கு இதயசுத்தியுடன் ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பதை சிறிலங்கா அதிகாரிகளும் அனைத்துலக சமூகமும் உறுதி செய்யவேண்டும்.

மகிந்தவுடன் தொடர்புகளைப் பேணும் சீனா – பீஜிங்கின் வழமைக்கு மாறான அணுகுமுறை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடனான தொடர்புகளை, சீனா தொடர்ந்து பேணி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் எனப்படும், சிவநநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நிறைவுக்கு வந்தது புனேயில் நடந்த இந்திய – சிறிலங்கா படைகளின் 14 நாள் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா படைகளுக்கு இடையில், ‘மித்ரசக்தி -2015 ‘ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய இராணுவத் தளத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

விசாரணைகளில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்பது சிறிலங்காவுக்கு புதிதல்ல – சட்டநிபுணர் வெலியமுன

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்றால், அதனை நம்பகரமாக முறையில் முன்னெடுக்க முடியும், என்றும் இது சிறிலங்காவுக்கு புதிய விடயமல்ல எனவும், சிறிலங்காவின் மூத்த  சட்டவாளர்களில் ஒருவரான ஜே.சி.வெலியமுன தெரிவித்தார்.

இரண்டாவது நாளை எட்டியது 217 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சிறிலங்காவில் நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்,  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது.