மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

pillayanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் எனப்படும், சிவநநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிள்ளையானை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணியளவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைத்து விசாரித்து வருவதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் பிள்ளையான், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *