மேலும்

மாதம்: September 2015

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை விட்டுக் கொடுக்குமா சீனா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்காவில் சீனப் பயணிகளால் முகங்கொடுக்கப்படும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த அறிக்கையை சீனா வெளியிட்டதா அல்லது சிறிலங்காத் தீவின் அரசியற் சூழலை மதிப்பீடு செய்வதற்காக இது வெளியிடப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டும்.

அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது.

சுவிசில் இன்று ‘கி.பி.அரவிந்தன்- ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக நிகழ்வு

ஈழப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான ‘கி.பி.அரவிந்தன் – ஒரு கனவின் மீதி’ அறிமுக நிகழ்வு இன்று சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரில் நடைபெறவுள்ளது.

கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்களை உள்ளடக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த புதனன்று வெளியிட்டது. 2009ல் முடிவடைந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகு

கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரித்துள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்

மோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த  இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.

இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது.

சிறிலங்காவுடனான இராணுவப் பயிற்சியில் மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லை – என்கிறது சீனா

சீன- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பயிற்சித் திட்டங்களில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேணல் லி செங்லின் தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றம் குறித்து ஜனவரியிலேயே தீர்மானம் – மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான வரும் ஜனவரி மாதமே முடிவு செய்யப்படும் என்று  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.