மேலும்

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பான சார்க் அமைப்பு செயலிழந்து போயிருப்பதால் பாகிஸ்தான் அதிருப்தி அடைந்துள்ளது.

2016ஆம் ஆண்டு காஷ்மீரின் ஊரியில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா தவிர்த்து வருகிறது.

பாகிஸ்தான், இந்தியா, சிறிலங்கா, பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் சார்க் அமைப்பின் கூட்டத்தை இந்தியா புறக்கணித்து வருவதால் அந்த அமைப்பு செயலிழந்து போயுள்ளது.

அதேவேளை சார்க் அமைப்புக்கு மாற்றாக, பிம்ஸ்ரெக் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில்தாம் ஓரம்கட்டப்படுவதாக கருதும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் புதிய கூட்டு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள பங்களாதேஷின் இடைக்கால அரசு தலைவர் முகமட் யூனுசின் ஆதரவையும் இந்த நாடுகள் பெற்றுள்ளன.

புதிதாக உருவாக்கப்படவுள்ள நாடுகளின் குழுவில், சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் சிறிலங்கா, நேபாளம் ஆபிகானிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ்-சீனா-பாகிஸ்தான் முத்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஜூன் 19 ஆம் திகதி,  சீனாவின் தெற்கு யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் முதலாவது முத்தரப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.

அங்கு மூன்று நாடுகளும் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதியளித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *