மேலும்

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் – ஐஎம்எவ் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளால், சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.5 சதவீதம் வரை குறையக் கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறிலங்காவுக்கு தற்போது அமெரிக்கா 10 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

ஜூலை 09 ஆம் திகதி வரை 44 சதவீத ட்ரம்ப் வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறிலங்காவின்  ஏற்றுமதி போட்டித்தன்மையை பாதிக்கும்.

குறிப்பாக இலாபம் குறைவாக இருக்கும் ஆடைகளில், வரியை மீண்டும் அமுல்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், வெளிப்புற தேவை குறைதல் மற்றும் வர்த்தக திசைதிருப்பல் காரணமாக, ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம்  வரை குறையக் கூடும்.

ஏற்றுமதியாளர்கள் தங்கள் வெளிநாட்டு நடவடிக்கைகளை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடிய அபாயமும் உள்ளது.

சிறிலங்காவுக்கும், வியட்நாம், இந்தியா அல்லது பங்களாதேஷ் போன்ற போட்டியாளர்களுக்கும் இடையிலான பரந்த இடைவெளி, ஏற்றுமதியைப் பாதிக்கும்.

சிறிலங்காவின் ஆடைகள் மற்றும் வேறு சில பொருட்களுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும் வியட்நாம், இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 20 சதவீத வரியை விதிக்க இணங்கியுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் பொதுவாக, சிறிலங்காவில் கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு 3.1 சதவீத வளர்ச்சியையும், இந்த ஆண்டு 3.5 சதவீத வளர்ச்சியையும் கணித்துள்ளது.  இருப்பினும் உண்மையான வளர்ச்சி அதிகமாக உள்ளது.

சிறிலங்காவின் போட்டித்தன்மை குறைவதும், நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதும் வணிக முதலீட்டை ஊக்கப்படுத்தாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இழப்புக்கு வழிவகுக்கும். வேலையின்மை அதிகரிக்கும்.

அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதற்கான பொது அழுத்தம், சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை மெதுவாக்கும் மற்றும் திட்டத்தின் செயல்திறன் குறைவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

குறிப்பிடத்தக்க உலகளாவிய வர்த்தக அதிர்ச்சிகளுடன் தொடர்புடைய அதிகரித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர்மறை அபாயங்கள் திட்டத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன, இது திட்ட இலக்குகளை அடைவதை கடினமாக்கும்.என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *