ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நாளை நியூயோர்க் செல்கிறார் மைத்திரி
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுமே, மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையில் புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பது போருக்குப் பின்னான சமூகங்களில் இலகுவாக இடம்பெறக்கூடிய ஒன்றல்ல. எனினும் இதற்கான தேவை மற்றும் அவசியமானது கைவிடப்பட முடியாத ஒன்றாகும்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், காணாமற்போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராயும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவு தொடர்பாக, இன்றும் நாளையும் ஜெனிவாவில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை குறித்து, ஆராய்வதற்காக சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக , அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்குப் பதிலாக, உள்நாட்டு விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடமும், அமெரிக்காவிடமும், அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.