மேலும்

அமெரிக்காவின் தீர்மான வரைவை ஜெனிவாவில் சிறிலங்கா நிராகரிப்பு

geneva-us-side-event (1)சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜெனிவாவில், நேற்று அமெரிக்கா நடத்திய முதலாவது முறைசாராக் கூட்டத்தில், சிறிலங்காவின் சார்பில் கருத்து வெளியிட்ட, ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, இந்த தீர்மான வரைவை நிராகரித்தார்.

ஜெனிவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த முறைசாராக் கலந்துரையாடல், ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி கெய்த் ஹாப்பர் மற்றும், தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிகளின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், தீர்மான வரைவு குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டை முன்வைத்த, ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க,

அமெரிக்கா தயாரித்திருக்கும் வரைவு, சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும்  நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை.

கூறிய விடயங்களை மீண்டும் மீண்டும் கூறுகிறது. தீர்ப்பைச் சொல்லும் வகையிலும், பரிந்துரைக்கிறது.

geneva-us-side-event (1)geneva-us-side-event (4)

இது கூட்டு அணுகுமுறையொன்றுக்கு உதவியாக இருக்கிறது. இருந்தபோதும் வரைவிலுள்ள பல பந்திகள் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், நல்லிணக்கத்தை நோக்கி கவனமாக அடியெடுத்து வைக்கும் செயற்பாடுகளைப் பாழடிக்கும் வகையிலும், கலந்துரையாடல்கள் மூலம் சமாதானத்தை கட்டியெழுப்பு வதற்குக் காணப்படும் இடைவெளியைக் குறைப்பதாகவும் உள்ளன.

இந்த அணுகுமுறையானது எதிர்மறையான அர்த்தம் கற்பித்தலுக்கு இடமளிப்பதுடன், செயற்பாடுகளைக் குலைப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கே உதவியாக அமையும்.

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை குற்றவியல் விசாரணை அல்ல, மனித உரிமை விசாரணை என்றும் கூறப்பட்டாலும், குற்றவியல் நீதி அம்சங்களை முன்வைப்பதானது தீர்மான வரைவை பிரேரணையை சமநிலையற்றதாக்குகிறது.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது காணப்படும் அரசியல் யதார்த்தங்களையும், அரசியல் ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் காணப்படும் சிரமங்களையும் உணர்ந்து கொண்டதாக இந்த தீர்மான வரைவு அமைய வேண்டும் என்பதில் சலரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

சரியான முறையில் அவதானிக்கப்பட்டு பொருத்தமான மொழியில் சிறிலங்கா மக்கள் மரியாதையாக உணரக்கூடியதாகவும் இது அமையவேண்டும்

கடந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் மீள ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் சகல இலங்கையர்களுக்கும் இறுதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உருவாகியிருக்கும் புதிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த 14ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய நல்லிணக்க செயற்பாடுகளும் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளும் முன்னெடுக்கப்படும்.

இந்தப் பொறிமுறைகள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பரந்துபட்ட ஆலோசனைகளை நடத்திய பின்னரே இறுதிப்படுத்தப்படும்.

ஜனவரி மாதம் 8ஆம் நாள் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிலங்கா பின்பற்றிவரும் புதிய அணுகுமுறையின் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.

எமது அரசாங்கம் சகல மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சுயவிருப்பத்தின் பேரில் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *