மேலும்

இறுதிப்போரில் 7000 பேரே மரணம் – ஐ.நா அறிக்கை மிகைப்படுத்தியதாக கூறுகிறார் மக்ஸ்வெல் பரணகம

Maxwell Parakrama Paranagamaஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், காணாமற்போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராயும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,

‘2011இல், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.

பெரும்பாலும், 7000 இற்கும் அதிகமானோர் தான் கொல்லப்பட்டிருக்கலாம்.

போர்க்காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக எமது ஆணைக்குழு இதுவரை துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியவில்லை.

எனினும், ஐ.நா நிபணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று நிச்சயமாக 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.

அந்த அறிக்கையில் கூட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியாக கூறப்படவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது.

மோதல் பிரதேசத்தில் புள்ளிவிபரவியல் திணைக்களம் வீடு வீடாக நடத்திய கணக்கெடுப்பு மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளில்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,700 ஐ நெருங்கியதாக இருக்கலாம்.

எனினும், எமது ஆணைக்குழு இதபற்றிய துல்லியமான எண்ணிக்கை பற்றிய முடிவு எதற்கும் வரவில்லை. ஆனால் 40 ஆயிரம் என்பது மிகையான கணிப்பு’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “இறுதிப்போரில் 7000 பேரே மரணம் – ஐ.நா அறிக்கை மிகைப்படுத்தியதாக கூறுகிறார் மக்ஸ்வெல் பரணகம”

  1. rk says:

    எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன … அமெரிக்க விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இறுதி கட்ட போர் க்கு பின்னர் ஒரு தமிழ் நெஞ்சம் கூட தனி ஈழம் பற்றி யோசிகவீல்லையா? ஐயா பாலசிங்கம் அவர்களும் மற்றும் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களும் விட்டு சென்ற அரசியல் ரீதியான அழுத்தத்தை கொடுக்க யாரும் முன்வரைள்ளய்யே. என் ஐ.நா அறிக்கை, ஐ.நா விசாரணை பற்றி கவலை பட்டு கொண்டு நேரத்தை வீணடிக்கிறோம்? நாம் நமது குரிகொலேளிருந்து விட்டு விலகி செல்ல காரணம் என்ன? ஒரு தமிழனுக்கும் துணிவில்லையா என்ன? இதற்கு முதற்படியாக நாம் எல்லோரும் சேர்ந்து இன்று முதல் 30 ஆம் திகதி வரை ஈழம் நேரம் இறவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒபாமா அவர்கள் மைத்திரிபால சிரிசேன விடம் தனி ஈழம் கொடுப்பதை பற்றீ வலிவுருத்த வேண்டும் என்று கூட்டூ தவம் மற்றும் கூட்டூ பிரார்த்தனை (எந்த கடவுள் ஆனாலும் சரி) செய்வோம். தவம் தெரியாதவர்கள் மற்றும்பிரர்தனைஇல் நம்பிக்கை இல்லாதவர்களும் மனதில் ஆலமாகா யோசித்தால் போதும். வேலை பளு அதிகம் உள்ளவர்கள், அவர்கள் வசதி கேற்ப தவம் மற்றும் பிரார்த்தனை யில் ஈடுபடலாம். இது துவக்கம் மட்டுமே…. இன்னும் ஒரு பாலசிங்கம், ஒரு தமிழ்ச்செல்வன் உருவாக வேண்டும் உருவாக வேண்டும், நமக்கு தனி ஈழம் பெற்று தர வேண்டும்..
    இதை எழுதி முடிக்கும் பொது மணி காலை 3.29 மணி. நான் தனி ஈழத்துக்காக பிரார்த்தனை செய்து விட்டு உறங்க போகிறேன்.
    நம்பிக்கையோடு
    ஆர் கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *