மேலும்

மாதம்: September 2015

ஜெனிவா தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறிலங்காவின் முடிவை பிரித்தானியா வரவேற்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.

மோடி – மைத்திரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அனைத்துலக விசாரணை, கலப்பு நீதிமன்ற யோசனை நீக்கப்பட்டது சிறிலங்காவின் பெரும் வெற்றியாம்

ஐ. நா. மனித உரிமை பேரவையில்  அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக  விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை  சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 2

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 1

மல்லராஜன் றஜீபா மற்றும் அவரது தம்பியான கானகன் ஆகியோர் மே 15 அன்று பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் முறையே  பத்து மற்றும் ஏழு வயதாகும். இவர்களது பெற்றோர்கள், நான்கு சகோதரர்கள் ஆகியோர் எறிகணை வீச்சின் போது பதுங்குகுழியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

ஜெனிவா தீர்மானம் நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை – ஜோன் கெரி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைத்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு சிறிலங்கா இணக்கம் – தீர்மானத்துக்கும் இணை அனுசரணை

கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவு- முழுமையாக

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைதகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து புதிய- திருத்தப்பட்ட- தீர்மான வரைவை நேற்றுமாலை சமர்ப்பித்துள்ளன.

அனைத்துலக தலையீடு இல்லாத விசாரணையை ஏற்கோம் – அமெரிக்காவிடம் சுமந்திரன் தெரிவிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கத் தவறினால், அதற்கு தாம் ஒத்துழைக்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவை வரவேற்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன்,  நம்பகமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும் வகையில், ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா சமர்ப்பித்துள்ள புதிய திருத்த வரைவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.