மேலும்

மாதம்: September 2015

ரவிராஜைக் கொல்ல கொலையாளிகளுக்கு துப்பாக்கியைக் கொடுத்த மூத்த இராணுவ அதிகாரி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி-56 துப்பாக்கியை, கொலையாளிகளுக்கு சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி வழங்கியது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையை மோடி அரசு ஏற்காது – முன்னாள் இந்திய இராஜதந்திரி

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை இந்தியாவின் மோடி அரசாங்கம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்றும், சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென்.

சம்பந்தன் – விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு – கருத்து முரண்பாடுகள் குறித்து பேசுவர்

நாடாளுமன்றத் தேர்தலின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும், அவர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக, அவருடன் தாம் நேரில் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பை இணங்க வைக்குமாறு மோடியிடம் கோருவார் ரணில்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.

மகிந்தவுடன் இப்போது மிஞ்சியுள்ள 47 பேர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் ‘பொறுப்புக்கூறல்’ தடுமாற்றம்

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அனைத்துலக நாடுகளை ஒன்றுபடுத்துவதில் அமெரிக்கா முன்னிற்க வேண்டும். தற்போது அமெரிக்கா சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதானது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு மிகப் பாரிய தடையாக உள்ளது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் சம்பந்தன்

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்காவிடம் கையளிப்பு – அடுத்தவாரம் பகிரங்கமாகும்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்மதிப் பயன்பாடு குறித்த உடன்பாட்டில் இந்தியாவுடன் கையெழுத்திடுகிறார் ரணில்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கான (சார்க்) செய்மதி தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன்  உடன்பாட்டில், கையெழுத்திடவுள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டி

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம் பெயர் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் மறைந்த கவிஞர் கி.பி அரவிந்தன் நினைவாக, தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும்  “காக்கைச் சிறகினிலே” மாதஇதழ் இந்தப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.