மேலும்

மாதம்: September 2015

இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா?

  பலம்பொருந்திய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்காக இலங்கையை கையாளும் சூழலில்தான், தமிழர் தரப்பு தங்களின் (தமிழரின்) நலனை முன்னிறுத்தி இன்றைய சூழலை கையாள வேண்டியிருக்கிறது- புதினப்பலகைக்காக – ‘யதீந்திரா’

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய 4 இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு மாத தடுப்புக்காவல் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளையும், மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

நாளை ஜெனிவா செல்லும் மங்கள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கிறார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

“அவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்”

சிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமது சிறிய நிலத்தில் மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்த நாட்களை லக்ஸ்மணன் தர்மராஜினி நினைவுகூருகிறார். ‘நாங்கள் மிகவும் மேன்மையான வாழ்வை வாழமுடிந்தது. ஆனால் இன்று எமது சந்தோசமான வாழ்வு எம்மை விட்டுச் சென்றுவிட்டது’ என தர்மராஜினி தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து – 4 அதிகாரிகள் பலி

மினுவாங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை வெளியிட்டார் கல்லம் மக்ரே

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் எதிர்காலத் திட்டம் – ரிச்சர்ட் ஆர்மிரேஜ் விளக்கம்

சிறிலங்காவுக்கு ஜனநாயகம் எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதைக் காண முடிந்துள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ போட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில்

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கிரித்தல இராணுவ முகாமுக்குள் தேடுதல் நடத்த சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுப்பு

விடுதலைப் புலிகளின் போலி முகாம் ஒன்றைச் செயற்படுத்திய கிரித்தல சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.

சுவிசில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு நூல் அறிமுக அரங்கு

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளருமான, புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான- கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் எழுதிய நினைவுப் பகிர்வின் தொகுப்பான ‘ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக அரங்கு சுவிசில் நடைபெறவுள்ளது.