மேலும்

தாஜுதீன் கொலை குறித்து மகிந்தவின் விசுவாசிகளான காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை

Anura Senenayakeசிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த அனுர சேனநாயக்கவே, தாஜுதீன் மரணம் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

தாஜுதீன் மரணம் நிகழ்வதற்கு  முன்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் உணவகத்தில் தாஜுதீன் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாஜுதீன் கொலை தொடர்பான முக்கியமான சான்றை காவல்துறையினர் விசாரிக்கவில்லை.

தாஜுதீனின் பணப் பை, விபத்து நடந்த இடத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் மீட்கப்பட்டிருந்தது. அதுபற்றி விசாரிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

தாஜுதீனைக் கடத்துவதற்கு, சிரிலிய சவிய அமைப்புக்கு, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *