மேலும்

செப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல்

Baroness Anelay, UK Minister of State for Foreign and Commonwealth Officeஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில், உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சமர்ப்பித்திருக்க வேண்டிய சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதையும், அதுகுறித்த விவாதத்தையும், ஒத்திவைக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்த பரிந்துரைக்கு பிரித்தானியா ஆதரவளிக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்ற, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *