மேலும்

பாப்பரசரின் பயணத்தை அண்டி தேர்தல் நடத்த வேண்டாம் – கத்தோலிக்கத் திருச்சபை கோரிக்கை

பாப்பரசர் பிரான்சிஸ் திட்டமிட்டபடி சிறிலங்கா வருவார் என்றும், பாப்பரசரின் வருகைக்குப் பின்னர், அதனை அண்டியதாக தேர்தல் எதையும் நடத்த வேண்டாம் என்று தாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும், கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்பின் ஊடகச் செயலாளரான வண.பிதா. சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், பாப்பரசரின் வருகைக்குப் பின்னர், உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால், அது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தப்படலாம்,

பாப்பரசரின் பயணத்துக்கு முன்னதாக, தேர்தல் நடத்தப்படுவதானால், பயண ஏற்பாடுகளை அது குழப்புவதாக அமையக் கூடாது.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும் என்று, சிறிலங்கா அதிபரைக் கேட்டுள்ளோம்.

அவரும் பாப்பரசரின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எல்லா ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது அல்லது அதற்கான நாளை நிர்ணயிப்பது அரசாங்கத்தினதும், தேர்தல் செயலகத்தினதும் கையிலேயே உள்ளது.

அந்த விவகாரத்தில் தலையிட கத்தோலிக்கத் திருச்சபை விரும்பவில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாப்பரசரின் வருகையை நிறுத்தும் அல்லது பிற்போடும் வகையில் சிறிலங்கா அதிபரோ, அரசாங்கமோ அழுத்தம் கொடுக்கவில்லை.

பாப்பரசரின் பயணத்துக்கு அரசாங்கம் மிகவும் ஆதரவளித்து வருகிறது.

பாப்பரசரை சிறிலங்கா வருமாறு முதலில் அழைப்பு விடுத்தது, கத்தேல்லிக்க ஆயர்களின் கூட்டமைப்புத் தான்.

சிறிலங்கா அரசாங்கம் அதற்குப் பின்னரே அழைப்பு விடுத்தது.

பாப்பரசரின் பயணத்தை அரசியல் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று, கத்தோலிக்கத் திருச்சபை எல்லாக் கட்சிகளிடமும் கோருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *