மேலும்

Archives

ஜேவிபி தலைவர்களுடன் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் சந்திப்பு

ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில்  உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஓய்வுபெறும் சிறிலங்கா இராணுவத் தளபதி – பிரியாவிடை சந்திப்புகளில் பங்கேற்பு.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த றொட்ரிகோ,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  மற்றும் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா ஆகியோருடன் பிரியாவிடை  சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் அமெரிக்காவின் முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சம்பூரில் அமெரிக்க- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் சிறிலங்காவும் தொடங்கியுள்ளன.

இந்தியத் திட்டங்களை கையாள சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தனிப்பிரிவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து  சிறிலங்காவும் இந்தியாவும் நேற்றுக் கலந்துரையாடியுள்ளன.

அமெரிக்க, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விஜித ஹேரத்துடன் செர்ஜியோ கோர் கலந்துரையாடல்

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதுவருமான செர்ஜியோ கோர், தெரிவித்துள்ளார்.

மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகளும் செம்மணிப் புதைகுழியில் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில், இருந்து நேற்று  மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதியின் நூல் வெளியீடு

சிறிலங்கா விமானப்படையின் ஒன்பதாவது தளபதியான எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்கவின் நினைவுக் குறிப்புகளான-  ‘ஒரே தேசமாக, ஒரே மக்களாக நிலைத்திருத்தல்’ (To Survive as One Nation, One People)  என்ற நூல், கொழும்பில்  வெளியிடப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான நேற்று 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.