செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் – இதுவரை 421
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று 13 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு நேற்று நடைபெற்றது.
இதன்போது, அடையாளம் காணப்பட்ட 13 எலும்புக்கூடுகளில், மூன்று ஒரே நேர்கோட்டிலும், நேர்சீரற்ற வகையில் 09 என்புக்கூடுகள் புதைக்கப்பட்ட நிலையும் காணப்பட்டன.
இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது,412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 390 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


