கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்ட உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர்
சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.
சிறிலங்கா துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்கவுடன் இணைந்து, போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டதாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க- சிறிலங்கா பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை வழங்குவதற்கும் உறுதியான வாய்ப்புகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று போல் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

