நேற்று மட்டும் 19 எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்பு – அகழ்வுப் பணி இடைநிறுத்தம்.
யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மட்டும், 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 32 வது நாள் அகழ்வின் போது, நேற்று புதிதாக எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதுவரையிலான அகழ்வு பணிகளில் 412 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அகழ்வு பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை 15ஆம் நாள் அளவில், அகழ்வுப் பணியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

