சிறிலங்கா பாதுகாப்பு தலைவர்களுடன் அமெரிக்க ஜெனரல் கலந்துரையாடல்
அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ஷ்னைடர் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில், பாதுகாப்புத் துறை தலைவர்கள் மற்றும் மூலோபாய சிந்தனையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நவீன போர்முறைகள் நாடுகளின் எல்லைகளுடன் நின்றுவிடுவதில்லை என்றும், முன்னேற்றகரமாக மாறிவரும் நவீன போர்முறைகளின் தன்மை, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை மறுவடிவமைக்கும் சமச்சீரற்ற சவால்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஜெனரல் ஷ்னைடர் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், இணையம் மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும், வெளிப்படையான உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இவை வலுவான பங்காண்மைகள் கட்டியெழுப்பப்படுவதற்கான சரியான அடித்தளங்களாக அமைகின்றன என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


