மேலும்

Archives

சிறிலங்கா அதிபரிடம் விரைவான முன்னேற்றங்களை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும், முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு வருமாறும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து யாழ். படைத் தளபதியுடன் சுவிஸ் அதிகாரிகள் ஆலோசனை

வடக்கில் முன்னாள் போராளிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான சவால்கள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார்.

மீண்டும் தேசிய சாதனையைப் படைத்தார் வடக்கு வீராங்கனை அனிதா (படங்கள்)

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் என்ற வீராங்கனை சிறிலங்காவின் 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவில், கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஐ.நா உதவிச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சந்திப்பு

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரன்கோவுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் தோமஸ் சானோனை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தாசீசியஸ் பவள விழா – ஒரு ஊடகனின் பார்வை

நாடகர், ஊடகர், ஏடகர் ஏ.சீ. தாசீசியஸ் அவர்களின் பவளவிழா அண்மையில் சுவிஸ் நாட்டின் லுற்சர்ன் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் கலை பண்பாட்டு நடுவம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தாய்த் தமிழகத்தின் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மங்கை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அமெரிக்க இராணுவத் தளபதியைச் சந்தித்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி

அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் ஏ மில்லேயுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கொமாண்டோக்கள் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருக்கு, அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவின் அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். வெலிசறை கடற்படைத் தளத்தில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்- சிறிலங்காவுக்கு ஐ.நா உதவிச் செயலர் கண்டனம்

சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்முறையாகச் சந்தித்துக் கொண்ட ட்ரம்ப் – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேற்று நியூயோர்க்கில் முதல்முறையாகச் சந்தித்தனர்.