மேலும்

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து யாழ். படைத் தளபதியுடன் சுவிஸ் அதிகாரிகள் ஆலோசனை

switzerland-jaffna sfவடக்கில் முன்னாள் போராளிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான சவால்கள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பர் 19) சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் மற்றும், கொழும்பில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலம்பெயர்தல் தொடர்பான முதன்மைச் செயலராகப் பணியாற்றும் கிசேலா ஸ்லூவெப் ஆகியோர், யாழ். படைகளின் தலைமையகத்தில், மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியைச் சந்தித்தனர்.

switzerland-jaffna sf

அதிகாரபூர்வமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிலையைப் புரிந்து கொள்வது, அவர்களின் முன்னேற்றங்கள், மற்றும் சமூக, பொருளாதார, மற்றும் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் போராளிகளின்  தற்போதைய வாழ்வாதார நிலை, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேலும் உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யாழ். படைகளின் கட்டளைத் தளபதி , சுவிஸ் அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *