மேலும்

Archives

ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி ஐ.நா பணியகம் முன் போராட்டம்

சிறிலங்காவில் இருந்து ரொஹிங்யா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக, நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு

பெல்ஜியத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அந்த நாட்டின் பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான, டிடியர் ரென்டேர்சுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரொஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசையில் பௌத்த பிக்குகள் போர்க்கொடி

மியான்மாரின் ரொஹிங்யா அகதிகளை சிறிலங்காவில் தங்க வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் அடங்கிய அடிப்படைவாதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி

இந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு இன்று நல்லூரில் இடம்பெற்றது.

சிறிலங்காவில் இந்தியப்படை அதிகாரிகளின் உயர்மட்டக் குழு

இந்திய இராணுவ உயர் கட்டளை கற்கைநெறி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. எயர் கொமடோர் சுரேஸ் ஹொல்லன்னாவர் தலைமையிலான இந்தக் குழுவின் இந்தியாவின் முப்படை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மட்ட பேச்சில் இணக்கம்

இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 4 ஆவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 9ஆம் நாள் சிறிலங்கா கடற்படையின் கடல் பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’, வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.  இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ நடாத்தப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- அஸ்கிரிய பீடம் வலியுறுத்தல்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம் என்று, அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.

வெறுமையான நாற்காலிகளின் முன் ஐ.நாவில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, அரங்கில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன என்று நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.