மேலும்

Archives

பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர் – உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கஹாகான் அபாசிக்கும் இடையில், நியூயோர்க்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சியோலில் நடக்கும் பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் பங்கேற்பு

தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்திய இராணுவத் தளபதிகளின் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு  பங்கேற்றுள்ளது.

நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவைச் சென்றடைந்தார்.

2009இல் ஜெனிவாவில் சிறிலங்கா வெற்றி பெற்றது எப்படி? – வெளிவராத தகவல்களைக் கூறும் நூல்

நான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பாறையில் பொதிகளைத் தரையிறக்கிய அமெரிக்க விமானப்படை விமானங்கள்

13 பசுபிக் நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்ற Pacific Airlift Rally 2017  ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

சுவிசில் இன்று ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு

நாடகம், ஊடகத்துறை விற்பன்னரும், புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்வி நூல் ஆக்கப் பணிகளில் களப்பணி ஆற்றியவருமான, ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு சுவிற்சர்லாந்தின், லுசேர்னில் இன்று நடைபெறவுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக மைத்திரியைத் திருப்பிவிட்டவர் பசில் ராஜபக்ச – போட்டு உடைத்தார் சதுரிக்கா

மகிந்த ராஜபக்சவிற்கும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புறவை, சீர்குலைத்தது பசில் ராஜபக்சவே என்று,  மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சதுரிக்கா சிறிசேன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி

போருக்குப் பிந்திய காலகட்டத்தில் வடக்கில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ச – மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அணி, மீண்டும் வடக்கை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கொழும்பு வந்தது

இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட, ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு

கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.