பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு
பெல்ஜியத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அந்த நாட்டின் பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான, டிடியர் ரென்டேர்சுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
பிரசெல்சில் உள்ள எக்மன்ட் பலசில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இருதரப்பு விவகாரங்கள் மற்றும் உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

