மேலும்

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’

ki-pi-annaகாக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.  இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ நடாத்தப்படுகிறது.

உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை  வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது. இந்தப் போட்டியில் உற்சாகமாப் பங்கெடுத்துச் சிறப்பிக்க உலகத் தமிழ் எழுத்தாளர்களை அன்போடு அழைக்கிறோம். இந்தக் குறுநாவல் தெரிவில் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் – இசை – நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய ‘கணினித் தமிழாக’ நான்காவது பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டியாக இது அமையப் பெறுகிறது.

போட்டி விதி முறைகள் :

 1. சுய ஆக்கமாக உலகத் தமிழ் எழுத்தாளர் பங்குபற்றும் போட்டி. இதுவரையில் ஊடகங்களில் பிரசுரமாகாத படைப்பு என்ற உத்தரவாதம் போட்டியாளரால் தரப்படல் வேண்டும்.
 1. கணனித் தமிழ் எழுத்துருவில் காக்கை இதழில் அதிகபட்சம் 35 பக்கங்கள் (ஏ4 தாள்களில் 28 – அண்ணளவாக 10000 சொற்களுக்கு மிகைப்படாத) கொண்டனவாக இந்தக் குறுநாவல்கள் அமையலாம்.
 1. தமது சுய விபரத்தையும் தொடர்பு விபரத்தையும் தனக்கான மின்னஞ்சலையும் எழுத்தாளர் கொண்டிருத்தல்.

0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: : kipian2018kaakkaicirakinile@gmail.com

0- தலைப்பு: உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018′ எனக் குறிப்பிடல் வேண்டும்.

0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 05.01.2018

 1. நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து முடிவுகளை அறிவிக்கும்.

நடுவர் குழு :

மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா)

மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா)

மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே)

 1. காக்கை இதழ்க் குழுமத்தின் தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானதாக அமையும்;. இந்த முடிவுகள் 2018 மார்ச்சு கடைசி வாரத்தில் முறைப்படி காக்கை குழுமத்தினால் வெளியிடப்படும்.
 1. பரிசுகள்:
 2. முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
 3. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
 4. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
 5. மூன்று ஆறுதல் பரிசுகள் : 2000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

தெரிவாகும் தகுதிபெற்ற குறுநாவல் எழுத்தாளருக்கு சிறப்புப் பரிசு : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டுச் சந்தா

Ki Pi Aravinthan ninaivu Pooddy 2018

2 கருத்துகள் “கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’”

 1. துடுப்பதி ரகுநாதன் says:

  சமீபத்தி்ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் மலேசிய தமிழ் மணி மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி 13-12-20217 அன்று நடந்த து. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது தான் புரிந்து கொண்டேன் தாய் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை விடவெளி நாட்டில் வாழும் தமிழர்களுக்கு அதிகமான மொழிப் பற்றும் அதன் வளர்ச்சியில் ஆர்வமும் இருப்பதை உணர்ந்தேன். இது போன்ற முயற்சி களே அதற்கு பாலமாக அமையும் ! உங்கள் அரிய முயற்சி க்கு என் பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *