மேலும்

Archives

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள்

இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண மற்றும் பயிற்சிப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் குறுகிய நேரப் பயணமாக இன்று காலை சிறிலங்கா வந்துள்ளார். இஸ்ரேலுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியிலேயே இன்று காலை அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்கா வந்தார்.

சீனாவின் முக்கியமான பங்காளி சிறிலங்கா – சீன உதவிப் பிரதமர்

சிறிலங்காவை, சீனாவின் முக்கியமான ஒரு பங்காளி என்று சீனாவின்  உதவிப் பிரதமர் வாங் யாங் தெரிவித்துள்ளார். சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று பீஜிங்கில் சீன உதவிப் பிரதமர் வாய் யாங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அரியாலை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படை முகாமில் மீட்பு

அரியாலை கிழக்கு – மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து புறப்பட்டது அமெரிக்க போர்க்கப்பல்களின் அணி

நான்கு நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக் கடற்படையின், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி, நேற்று புறப்பட்டுச் சென்றது.

சிறிலங்கா அதிபரை முதல்முறையாகச் சந்தித்த சிறிலங்கா கடற்படைத் தளபதி

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை முதல் முறையாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மராட்டிய முதல்வரைச் சந்தித்தார் மகிந்த

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதில்லை- இந்திய மாநாட்டில் மகிந்த

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.