மேலும்

Archives

பிரித்தானிய இளவரசர் சிறிலங்கா வந்தார்

ஐந்து நாட்கள் பயணமாக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் தமது துணைவியுடன் சிறிலங்கா வந்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசரை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வரவேற்றார்.

வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும் ஆதரவாளர்கள்

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது கூட்டமைப்பு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வவுனியாவில் வெளியிடப்பட்டது.

முடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்?

இலங்கைத் தமிழர்களின் நடப்பு அரசியல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவே உருமாறி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து, ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வகிபாகம் ஓய்வு நிலைக்கு வந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு சில வருட காலம் நீடித்தது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவ வேண்டும் – இந்தோனேசிய அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவ வேண்டும் என்று, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் இந்தோனேசிய அதிபர் – முதலீட்டு, வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சு

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குவியுங்கள் – சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா கடற்படை வாகனம் மோதி மாணவி பலி – புங்குடுதீவில் பதற்றம்

யாழ். தீவகத்தில் உள்ள புங்குடுதீவில், இன்று காலை சிறிலங்கா கடற்படையின் கவச வாகனம் மோதி, பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

மைத்திரியிடம் வெற்றிக்கிண்ணம்

2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான, வெற்றிக்கிண்ணம் சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் பதவியேற்பு

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன ஆவணங்களைக் கையளித்தனர்.