மேலும்

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

மகிந்தவை முந்தினார் ரணில் – அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் இருபிரதான கட்சிகளும், அரச பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்துள்ளன.

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயார் – என்கிறார் ரணில்

தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்க ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து யானைச் சின்னத்தில் ஐதேக போட்டியிடவுள்ளது.

ரணில் – சந்திரிகா இன்று முக்கிய சந்திப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

20ஆவது திருத்தச்சட்டத்தை தோற்கடிப்போம் – ரணில் வாக்குறுதி

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்கு அச்சுறுத்தலாகவும், இருகட்சி முறைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தால், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவசரமாக கூடுகிறது ஐதேக செயற்குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – செவ்வாயன்று நாடாளுமன்றில் சூடுபறக்கும்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு வரும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கெட்டவார்த்தையால் ரணிலைத் திட்டினார் வாசுதேவ – எதிர்க்கட்சியினர் கைதட்டி வரவேற்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பைத்தியக்காரன் என்று கூறி கெட்டவார்த்தையால் திரும்பத் திரும்ப திட்டினார்.