மேலும்

கெட்டவார்த்தையால் ரணிலைத் திட்டினார் வாசுதேவ – எதிர்க்கட்சியினர் கைதட்டி வரவேற்பு

vasudeva-nanayakkaraசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பைத்தியக்காரன் என்று கூறி கெட்டவார்த்தையால் திரும்பத் திரும்ப திட்டினார்.

இதனைப் பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்தது.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்றைய அமர்வில், ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை வாசுதேவ நாணயக்கார எழுப்பிய போது, அதற்கு  பிரதமர் ரணில் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவவைப் பார்த்து அறிக்கையின் மூன்றாம் பக்க விடயங்களில் ஒருபகுதியையே இங்கு நான் வாசிக்கிறேன். எனவே அமருங்கள் என்று கூறியதுடன், அவரைப் பார்த்து அமருமாறு சைகை காட்டினார்.

இதனால், ஆவேசமடைந்த வாசுதேவ நாணயக்கார, “நீ யார் என்னை அமரச் சொல்வதற்கு?” ” நீயா சபாநாயகர்?” ” நீ சபாநாயகர் இல்லை… ஒழுங்குப் பிரச்சினையின் நிமித்தமே எழுந்துள்ளேன் -பைத்தியக்கரான்” என்று கூறியதுடன், கெட்டவார்த்தை ஒன்றையும் மீண்டும் மீண்டும் கூறி நீ உட்கார் என்றும் கூறினார்.

இதனால் சபையில் குழப்பம் அதிகரித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சத்தமாக சிரித்து மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்தனர். எனினும், சபாநாயகர் சமல் ராஜபக்ச அமைதியாக இருந்தார்.

அதேவேளை, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்கள் பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடைசியாக, பார்வையாளர் பகுதியில் மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர் என்பதை மட்டும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *