பிரித்தானியத் தூதுவர் சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு
சிறிலங்காவுக்கான, பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான, பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது யோசனைகளை நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலையில் கொழும்பை வந்தடைவார் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் 19வது திருத்தச்சட்டத்தில், அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்திலேயே நேற்று கடைசிநேரம் வரை இழுபறி காணப்பட்டது. எனினும், பிடிவாதமாக இருந்த ஐதேகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடைசியில் இறங்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த குழுநிலை விவாதங்களுக்குப் பின்னர், 19வது திருத்தச்சட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில், தனது எடைக்கு இணையாக 77 கிலோ சந்தனக்கட்டைகளை துலாபாரம் கொடுத்து, வழிபாடு செய்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன.