பிள்ளையானின் 3 சகாக்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை
பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, இனியபாரதியும் மற்றொருவரும் கிழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, கருணா மற்றும் பிள்ளையான் மீது இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக, பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, அடுத்த மாதம் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலருமான பூ.பிரசாந்தன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.