மெத்தை, தலையணை இல்லை – வெறும் தரையில் உறங்கும் சம்பிக்க
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறங்குவதற்கு மெத்தையோ, தலையணையோ வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறங்குவதற்கு மெத்தையோ, தலையணையோ வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வந்துள்ள சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சிறப்புப் பிரதிநிதி, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வணிக உடன்பாடு குறித்து மீளாய்வு செய்யப் போவதில்லை என்ற சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸின் மனநிலை குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மனநல நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்வைக் கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் தூதரக பணியாளர் கூறிய குற்றச்சாட்டுடன், கொழும்பில் சுவிஸ் தூதரகம் தொடர்புபட்டிருக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.