மேலும்

சுவிஸ் தூதரக பணியாளரின் மனநல அறிக்கை இன்று நீதிமன்றில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸின் மனநிலை குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று  தேசிய மனநல நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவித்தார்.

”கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸின் மனநிலை குறித்து நேற்று இரண்டாவது தடவையாக பரிசோதிக்கப்பட்டது.

குற்ற விசாரணைத் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க உளவியலாளர்களின் மதிப்பாய்வுக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நான்கு சிறப்பு மனநல மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று அவரைப்  பரிசோதித்தது. பெண் மருத்துவ ஆலோசகர்களையும் உள்ளடக்கியதாக அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அலைபேசியை ஒப்படைக்க தூதரகத்துக்கு உத்தரவு

இதற்கிடையே  கானியர் பிரான்சிஸ் மற்றும் அவரது கணவனின், அலைபேசி  மற்றும் அலைபேசிக்கான சிம் அட்டைகளை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.

இவை சுவிஸ் தூதரகத்தின் பொறுப்பில் இருக்கும் நிலையிலேயே அவற்றை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிவான் சுவிஸ் தூதரகத்துக்கு நேற்று பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *