அமெரிக்காவின் எதிர்காலத் திட்டம் – ரிச்சர்ட் ஆர்மிரேஜ் விளக்கம்
சிறிலங்காவுக்கு ஜனநாயகம் எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதைக் காண முடிந்துள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு ஜனநாயகம் எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதைக் காண முடிந்துள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
விடுதலைப் புலிகளின் போலி முகாம் ஒன்றைச் செயற்படுத்திய கிரித்தல சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.
ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளருமான, புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான- கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் எழுதிய நினைவுப் பகிர்வின் தொகுப்பான ‘ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக அரங்கு சுவிசில் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
சிறிலங்காவின் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஆரம்பமாகியது.
கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்கா மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. ஆனாலும் தற்போது சிறிசேனவின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்குவதென அமெரிக்கா அறிவித்ததானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அரசதரப்புக் குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.
சிறிலங்காவின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில், ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் வாகனச் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.