மேலும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் ருவான் விஜேவர்த்தன – விஜயகலாவுக்கு சிறுவர் விவகாரம்

ruwan-wijewardeneசிறிலங்காவின் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஆரம்பமாகியது.

இன்று காலை இந்தப் பதவியேற்பு இடம்பெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அமைச்சரவைக் கூட்டத்தினால், காலையில் நடக்கவிருந்த பதவியேற்பு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, இன்று காலை மூன்று அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றிருந்தனர்.

ஐதேகவைச் சேர்ந்த மலிக் சமரவிக்கிரம அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வர்த்தக அமைச்சராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, விஜித் விஜயமுனி சொய்சா,  நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சராகவும், பைசர் முஸ்தபா, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக வும் பதவியேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

new-ministers

அதேவேளை, இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிபர் செயலகத்தில், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு ஆரம்பமாகியது.

இதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் ருவான் விஜேவர்த்தன பொறுப்பேற்றுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் நிகழ்வில் இதுவரை 17 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

  1. ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாடு
  2. டிலான் பெரேரா  – நெடுஞ்சாலைகள்
  3. டி.பி.ஏக்கநாயக்க – காணி
  4. பிரியங்கார ஜயரத்ன – சட்டம் மற்றும் ஒழுங்குகள்
  5. லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன  – நிதி
  6. ரவீந்திர சமரவீர – தொழில் உறவுகள்
  7. வீ.இராதாகிருஷ்ணன்  – கல்வி
  8. பாலித ரங்க பண்டார –  தொழிற்பயிற்சி
  9. துலித் வெதஆராச்சி – மீன்பிடி
  10. நிரோசன் பெரேரா- தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம்
  11. ருவான் விஜேவர்த்தன – பாதுகாப்பு
  12. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – புனர்வாழ்வு
  13. மோகன்லான் கிரேரோ – பல்கலைக்கழக கல்வி
  14. சம்பிக்க பிரேமதாச- கைத்தொழில்
  15. விஜயகலா மகேஸ்வரன் – சிறுவர் விவகாரம்
  16. வசந்த சேனநாயக்க – நீர்ப்பாசன, நீர்வளங்கள்
  17. சுஜீவ சேனசிங்க-  வெளிநாட்டு வர்த்தகம்
  18. வசந்த அலுவிகார – விவசாயம்
  19. சுதர்சனி பெர்னான்டோ புள்ளே – நீர் விநியோகம்

இதையடுத்து, பிரதி அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தொடர்கிறது.

  1. சுமேதா ஜயசேன – வனஜீவராசிகள்
  2. சுசந்த புஞ்சிநிலமே – பொது நிர்வாகம்
  3. அமீர் அலி – கிராமிய பொருளாதாரம்
  4. லசந்த அழகியவன்ன – மேல்மாகாண அபிவிருத்தி
  5. இந்திக்க பண்டார – வீடமைப்பு
  6. பைசல் காசீம் – சுகாதாரம்
  7. துலிப் விஜயசேகர – அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகாரம்
  8. லக்ஸ்மன் வசந்த – பெருந்தோட்டம்
  9. நிசாந்த முத்துஹெட்டிகம – கப்பல்துறை மற்றும் துறைமுக சேவைகள்
  10. துனேஷ் கங்கந்த – அனர்த்த முகாமைத்துவம்
  11. ஹர்ச டி சில்வா – வெளிவிவகாரம்
  12. அனோமா கமகே – பெற்றோலியம்
  13. அஜீத் பெரேரா – வலு மற்றும் சக்தி
  14. எரான் விக்கிரமரத்ன – அரச தொழில்முயற்சியாண்மை
  15. ரஞ்சன் ராமநாயக்க – சமூக சேவைகள்
  16. அசோக அபேசிங்க – போக்குவரத்து
  17. அருந்திக்க பெர்ணான்டோ – உள்நாட்டு விவகாரம்
  18. தரணத் பஸ்நாயக்க – தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு
  19. எச்.எம்.எம்.ஹரிஸ் – விளையாட்டு
  20. கரு பரணவிதான – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
  21. நிமல் லன்ஸா – சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரம்
  22. அநுராத ஜயரத்ன- மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *