மேலும்

பிரிவு: செய்திகள்

தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அனுராதா மிட்டல்

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீதித்துறை சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஒக்லண்ட் நிறுவனம் என்ற கலிபோர்னியாவைத் தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய-  நாட்டில் தீவிரவாதம்  தலையெடுக்கும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் – முதலமைச்சர் குற்றச்சாட்டு

வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் காவல்படையால் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால், காரைக்கால் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா படை அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிபர் ஆணைக்குழுவினால் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது

சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகரத் திட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆராய புதிய குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த, இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

சிறிலங்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்

சிறிலங்காவானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும்.