மேலும்

அவன்ட் கார்ட் விசாரணைக்கு சிறிலங்கா உதவ வேண்டும் – இந்திய இராணுவ நிபுணர்

Lt. Gen. Prakash Katochஇந்தியக் கடல் எல்லைக்குள் அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்  என்ன செய்தது என்பது குறித்த இந்தியாவின் விசாரணைக்கு சிறிலங்கா அதிகாரிகள் உதவ வேண்டும் என்று, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியான லெப்.ஜெனரல் பிரகாஸ் கடோஜ் தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகள் குறித்து, தி ஹிந்து நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் அதிகாரியாக இருந்த லெப்.ஜெனரல் பிரகாஸ் கடோஜ்-

இந்த ஆயுதக்கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் பயணித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது கவலையளிக்கும் விடயம்.

இதுபற்றிய நம்பிக்கையான தகவல்களை இந்தியாவுக்கு சிறிலங்கா  வழங்க வேண்டும். கப்பலின் உண்மையான நோக்கத்தின் பின்னணி  என்னவென்றும், அவன்ட் கார்ட் நிறவனம் பற்றிய தகவல்களையும் வழங்க வேண்டும்.

பெரும் எண்ணிக்கையான ஆயுதங்கள் ஒரு கப்பலில் இருப்பது வழக்கத்துக்கு மாறானது. இது இயற்கையாகவே சந்தேகத்தை எழுப்பும்.

யாருக்காக இந்த ஆயுதங்கள் என்ற தகவலை சிறிலங்காவிடம் இந்தியா கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *