மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகளும் செம்மணிப் புதைகுழியில் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில், இருந்து நேற்று மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்றது.
அருகருகே புதைக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 13 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சில எலும்புகள் குவியலாகவும், சில எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குவியலாக காணப்பட்ட எலும்புக் குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதனால், ஆய்வுகளின் பின்னரே மேலதிக தகவல்களை கூற முடியும் என சட்டத்தரணி ஞா.ரனிதா தெரிவித்தார்.
அதேவேளை, நேற்று 03 சிறுவர்களின் எலும்புக்க்கூடுகள் உள்ளிட்ட 04 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 467 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 444 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

