கைது செய்யப்படுவதை தடுக்க கோரும் கோட்டாவின் மனு- பரிசீலனை ஒத்திவைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வது மற்றும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த மனு நேற்று நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டவாளர் ரொமேஷ் டி சில்வா முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தார்.
இந்த வாதங்களை அடுத்து மேலதிக வாதங்கள் தொடர்பாக இந்த மனுவை ஓகஸ்ட் 3 ஆம் நாள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் கட்டளையிட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் போது, கோட்டாபய ராஜபக்சவும் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
