அந்தோனியார் தேவாலயத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்
சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்சுடன் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்ற தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அருட்தந்தையிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் தேவாலயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் பார்வையிட்ட அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள ஒளிப்படங்களையும் பார்வையிட்டார்.